1007 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கோவையில் 14 லட்சத்து 82 ஆயிரத்து 79 ஆண்கள், 15 லட்சத்து 32 ஆயிரத்து 35 பெண்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர் கள் 539 பேர் என மொத்தம் 30 லட்சத்து 14 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர்.
இறந்தவர்கள் 15 ஆயிரத்து 600 பேர், இடம் பெயர்ந்தவர்கள் 32 ஆயிரத்து 733 பேர், ஒன்றுக்கு மேற்பட்ட பெயர் பதிவு உள்ள 1 லட்சம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 333 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
1007 வாக்குச்சாவடிகள்
மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய வருகிற 2.12.22 வரை சம்மந்தப்பட்ட அலுவ லகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியாக கோவை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக 1007 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
மேலும் திருத்தம், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் வாக்கா ளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயருடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
26, 27-ந் தேதியும் முகாம்
இதைத் தொடர்ந்து வருகிற 26, 27 ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்கிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு உரிய படிவங்களை கொடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.