சட்டசபை இருக்கையில் மாற்றமில்லை: எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பதாக தகவல்…!

0
78

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பல பிரச்சினைகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் நீடிக்கிறார். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் கட்சி பதவி தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவுவிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்கூட்டியே கடிதம் அளிக்கப்பட்டது.

இந்த இருதரப்பு கடிதங்களையும் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகில் இருக்கும் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர முடியுமா என்ற பல கேள்விகள் எழுந்தனர்.

இந்த நிலையில், சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கைகள் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதேபோன்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மூலம் தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சி துணைத்தலைவராக நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.