ஆனைமலையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 75). இவருடைய மனைவி காவேரியம்மாள்(82). இவர்களது குடும்பத்தினர் தந்தை பெரியார் மீது அதீத பற்று கொண்டவர்கள் ஆவர்.
இந்த நிலையில் காவேரியம்மாள் நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். வழக்கமாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் மரணம் அடைந்த காவேரியம்மாளின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்தனர். பின்னர் உடலை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
காவேரியம்மாளின் கணவர் சுப்பிரமணியன் கடந்த 2015-ம் ஆண்டு இறந்தார். அவரது உடலும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.