தனிபட்ஜெட்
கோவையில் நடந்த உழவர் தின விழாவில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எதிரும் புதிருமாக இருக்கும் நாங்கள் விவசாயிகளுக்காக இங்கு ஒன்றாக இருக்கிறோம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டு பொள்ளாச்சி ஜெயராமன் கொப்பரை, கொப்பரை என்று பேசுகிறார். தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக ஆதரவு தரமுடிய வில்லை. ஏன் என்றால் தென்னை வாரியம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் 41 இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படு கிறது. நாங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டும் தான் செய்ய முடியும். விவசாயிகள் மீது தனிக்கவனம் செலுத்தி தமிழக அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறது.
கொப்பரை கொள்முதல்
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருங்காலத்தில் பட்ஜெட் இருக்கும். 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இது வரை கொள்முதல் செய்து இருக்கிறோம். மத்திய அரசு அனுமதி கொடுத்தால் ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு மத்திய மந்திரியிடம் பேசி வானதி சீனிவாசன் அனுமதி வாங்கி தர வேண்டும்.
தென்னை வாரியம் மத்திய அரசிடம் இருப்பதால் விலை நிர்ண யத்தை அவர்கள் செய்கின்றனர்.
கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சரிடம் பேசி அதற்கு சாத்தியம் இருக்கிறதா என பார்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய் சாப்பிட நம் மக்களிடம் பயம் இருக்கிறது
. இவ்வாறு அவர் பேசினார்.