தென் திருமலை வெங்கடேஸ்வரசுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி

0
65

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 13-ந் தேதி தொடங்கி தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

அதனை தொடர்ந்து புண்ணியாக வாஜனம் ஹோமம், காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி ஸ்நபன திருமஞ்சனம்,மாலை 4 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் பவித்ர மாலையுடன் நாதஸ்வர இசை மேள தாளம் முழங்க மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதன்பின்னர் மாலை 4.40 மணிக்கு புண்ணியாக வாஜனம் ஹோமம், வசுத்தாரா ஹோமம் இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் கே.ஜி.குழும தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், கே. ஜி. டெனிம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.