தண்ணீர்தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்தது

0
68

வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் தொழிலாளர் கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது. அது, தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது கால் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது.

இது குறித்து வால்பாறை வனச்சரகர் வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் காட்டெருமையை தண்ணீர் தொட்டிக்குள் இருந்து மீட்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள், வேட்டை தடுப்பு காவலர்கள், தீயணைப்பு துறை, வில்லோணி எஸ்டேட் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர்.

ஆனால் காட்டெருமையை மீட்க முடிய வில்லை. இதையடுத்து தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெரு மையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் அந்த தொட்டி மிகவும் உறுதியாக உள்ளதால் அதை உடைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.