அரசு அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

0
58

கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் கடந்த 8-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க ஆரம், செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.