நகையை பறித்த வாலிபருடன் போராடிய பெண்

0
81

கோவை கணபதி அடுத்துள்ள காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (வயது58).தனியார் நிறுவன ஊழியர்.இவர் பால் வாங்குவதற்காக காந்திமாநகர் முதல்வீதியில் நடந்து சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென ஷோபனா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.

உடனே சுதாரித்து கொண்ட ஷோபனா, நகையை விடாமல் ஒரு கையால் பிடித்து கொண்டு அந்த வாலிபருடன் தப்பிக்க போராடினார். இருந்தாலும் அந்த வாலிபர் விடாமல் அவரை தர..தரவென இழுத்து நகையை பறிக்க முயன்றுள்ளார். உடனே ஷோபனா திருடன் திருடன் என கூச்சல் போடவே, அந்த வாலிபர், கழுத்தில் இருந்து அறுபட்ட பாதி நகையுடன் அங்கு தயாராக மோட்டார் சைக்கிளில் காத்திருந்த நண்பருடன் தப்பிச்சென்றார். ஷோபனா அணிந்திருந்த 3 பவுனில் ½ பவுனை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 ேபரையும் தேடி வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/State/the-girl-fought-with-the-boy-who-stole-the-jewelry-791516