முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

0
90

வேட்டைக்காரன்புதூரில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் ஓ.எஸ்.பி. நகரில் லட்சுமி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 3 மணிக்கு ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, காலை 8 மணிக்கு திருமஞ்சனம், விமான கலசங்கள், எந்திர தகடுகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9.30 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, திரவியாகுதி, விமான கலசங்கள் வைத்தல், மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு 4-ம் காம் கால வேள்வி பூஜை, மலர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் லட்சுமி விநாயகர், முத்துமாரியம்மன், ஆறுமுகபெருமான், கன்னி மூலகணபதி, கருப்பராயசுவாமி, நவகிரக நாயகர்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மகாஅபிஷேகம், 9 மணிக்கு தசதரிசனம், அலங்கார பூஜை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.