கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை…!

0
62

நடிகர் அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீப காலமாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், லடாக் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித்துடன் ராணுவ வீரர்கள் சிலர் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றனர்.