கோவை வைசியாள் வீதியில் அரசு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் கடந்த 28-ந் தேதி நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கணினி மோடத்தை திருடி சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி மேலாளர் ஷ்யாம் சுந்தர் (வயது 41) கோவை பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கணினி மோடத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.