வாடகை கார்
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண் சக்திவேல். இவர் செல்போன் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் காரமடை விஜயநகரம் பகுதியை சேர்ந்த அஜீத் (30) என்பவர் செல்போன் ஆப் மூலமாக பதிவு செய்துள்ளார். அதன் பேரில் அந்த நிறுவனம் அவருக்கு சொகுசு காரை வாடகைக்கு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அஜீத், ஆரம்பத்தில் 2 மாதங்கள் மட்டுமே காருக்கு உரிய வாடகை கொடுத்து வந்த நிலையில் அதன் பின்பு பணம் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து சரண் சக்திவேல் காரமடை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தேரம்பாளையம் அருகே போலீசார் ரோந்து வந்த போது, அவ்வழியாக காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், சரண் சக்திவேலிடம் மொபைல் ஆப் மூலமாக பதிவு செய்து காரை வாடகைக்கு எடுத்து சென்ற அஜீத் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பதும், பின்னர் அவற்றை விற்று பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
மேலும், இதேபோல் பல்வேறு மொபைல் ஆப்களின் மூலமாக கார்களை வாடகைக்கு எடுத்து அதனை அடமானம் வைத்தும், விற்றும் பணம் சம்பாதித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.