தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா வன்முறையில் ஈடுபடுகிறது

0
76

தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா வன்முறையில் ஈடுபடுகிறது

சுதந்திரதின விழாவையொட்டி த.மு.மு.க. கோவை மத்திய மாவட்டம் சார்பில் கொடியேற்றுதல் நடந்தது. தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.சர்புதீன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, பன்மைதன்மைதான் நாட்டின் வலிமை என்று பேசினார். அது பேச்சளவில் இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும். 1,600-க்கும் மேற்பட்ட மொழிகள் நமது நாட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்தி என்ற ஒற்றை மொழியை திணிக்க அரசு செயல்படுத்தி வருவது பன்மைதன்மையை பலவீனப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜனதாவினர் தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட செயலாளர்கள் முஜிபுர்ரகுமான் (த.மு.மு.க.), இப்ராகிம் (ம.ம.க.), துணை தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் அமீது மற்றும் முகமது ஆசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.