சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

0
71

சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

பொள்ளாச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழா

பொள்ளாச்சி பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் போலீசார், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து சப்-கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாவில் சிறப்பாக பணியாற்றிய 29 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மரியாதை

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டர் ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஜோதி நகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில் நகராட்சி சிறுவர் பூங்காவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை அலுவலகத்தில் தலைவர் வெள்ளை நடராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.