கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் டி.அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் உள்ளார்.
இவர் சாதாரண சைக்கிள் மூலமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 760 கிலோமீட்டர் தொலைவினை பகலில் பயணம் செய்து 4 நாட்களில் கடந்துள்ளார்.
சாதாரண சைக்கிள் மூலமாக தொடர்ந்து இடைவிடாமல் சவாரி செய்து ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 406 கிலோ மீட்டர் தொலைவினை கடந்தும், ஓய்வின்றி 5 கிலோ மீட்டர் தொலைவினை ஓடியும் கடந்துள்ளார்.
சாதனை படைத்த அறிவழகனுக்கு, மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, ரியல் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவன சான்றிதழை வழங்கி பாராட்டினார்.