வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் சாவு

0
153

பொள்ளாச்சி அருகே கோட்டூரை சேர்ந்தவர் மணிமாறன். விவசாயி. இவர், நேற்றுகாலை அங்குள்ள தனது தோட்டத்தில் நடைபயிற்சிக்கு சென்றார்.

அங்கு அவர், கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த 2 நாய்குட்டிகள், 2 வாத்துகள் ஆகியவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆழியாறு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். அவர்கள், நாய் மற்றும் வாத்துக்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகே பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

இதில் அங்கு நாயின் கால்தடங்கள் மட்டும் இருந்தன. இதனால் வெறிநாய் கடித்து நாய்கள், வாத்துகள் இறந்ததாக வனத்துறையினர் கூறினர்.

எனவே வெறிநாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.