தண்ணீர் கசிவதை தடுக்க கோதவாடி குளக்கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோதவாடி குளம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் 152 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நீர் வழிப்பாதை காணாமல் தூர்ந்து போனது.
எனவே கோதவாடிகுளம் பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர் கரங்கள் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி தன்னார்வ லர்கள் உதவியுடன் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து கோதவாடி குளம் தூர்வாரப்பட்டு, குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. பின்னர் தமிழக அரசிடம் பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் தண்ணீர் விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
கரையை பலப்படுத்தும் பணி
அதன்பேரில் தமிழக அரசு பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் மெட்டு வாவி, செட்டியக்காபாளையம் ஆகிய கிளை வாய்க்கால் பகுதி வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் கோதவாடி குளத்துக்கு வந்து சேர்ந்தது.
இதனால் அந்த குளம் நிரம்பி நிரம்பி மருகால் பாய்ந்து சென்றது.
இதன் காரணமாக கோதவாடி குளத்தை சுற்றி உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தது. இதற்கி டையே கோதவாடி குளத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் கசிந்து வெளியேறியது.
தண்ணீர் கசிவு நின்றது
இதற்காக குளத்தின் உட்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு கோத வாடி குளத்தின் கரைகளில் மணல் கொட்டி பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது குளத்தில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோதவாடி குளத்தின் அனைத்து பகுதிகளிலும் கரையை பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.