தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
101

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க துணை செயலர் அரங்கநாதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட டி.ஏ. தொகையை உடனே வழங்க வேண்டும்.

அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் ஆக்கிடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ஏராளமான தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.