ரூ.3 கோடியில் தாசில்தார் அலுவலகம் திறப்பு -மாவட்ட கலெக்டர் ஆய்வு

0
90

ஆனைமலை முக்கோணத்தில் ரூ.3 கோடி 5 லட்சத்து 22 ஆயிரம் செலவில் 8 அறைகளை கொண்டு தாசில்தார்அலுவலகம் கட்டப்பட்டுள்ளது .மேலும் 966 சதுர அடி பரப்பளவில் தாசில்தார் குடியிருப்பும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தாசில்தார் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அந்த கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா மகேஷ், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், பேரூர் தி.மு.க செயலாளர் டாக்டர் ஏபி.செந்தில்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.சுந்தரம், கார்த்திக் அப்புசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.