மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமனம்

0
84

மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமனம்

கோவை நகரில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரிகள் குழு

கோவை நகரில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எனவே மழைநீரை அகற்றுதல் மற்றும் மீட்பு பணிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

மேம்பால பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அவசர காலத்தில் சீரமைப்பு பணி களை மேற்கொள்ள என்ஜினீயர்கள் ஆர்.புவனேஸ்வரி, கே.கணே சன், விமல்ராஜ், செந்தில்பாஸ்கர், சக்திவேல், எல்.சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள், சிவானந்தாகாலனி, கிக்கானி பாலம், காளீஸ்வரா மில் ரோடு பாலம், லங்காகார்னர் ரெயில்வே மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம், பீளமேடு நவஇந்தியா சிக்னல் பகுதி, ஆவாரம்பாளையம் ரெயில்வே பாலம் ஆகிய இடங்களில் மழை நீரை அகற்றுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

மேலும் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சம் வாகனம் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தனிப்படையினர் தயார் நிலையில் இருப்பார்கள்.

பில்லூர் 3-வது திட்டம்

கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், மோட்டார் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை துரிதப் படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெரும்பாலான பணிகள் முடிந்துவிடும்.

சிறுவாணி பகுதியில் போதிய அளவு மழை பெய்து வருகிறது. 2 குடிநீர் திட்டங்கள் மூலமும் நகருக்கு 178 எம்.எல்.டி. குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.

ரூ.250 கோடி பாக்கி

கோவை நகரில் பணிகள் செய்த காண்டிராக்டர்களுக்கு ரூ.250 கோடி பாக்கி உள்ளது. அந்த தொகை படிப்படியாக வழங்கப்ப டும். கோவையில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடைபெ றும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக புகார் வருகிறது. திட்ட பணிகள் முடிந்ததும் அந்த சாலைகள் சீரமைக்கப்படும்.

13 மாநகராட்சி சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக் கப்பட்டது. அதை அவர்கள் இன்னும் ஏற்கவில்லை.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக ரூ.30 கோடி திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டுகளில் மாநில அரசின் நிதியை கூட சரியான அறிக்கையை சமர்ப்பித்து பெறாமல் இருந்துள்ளனர். எனவே தற்போது மாநில அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.