பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

0
100

பொள்ளாச்சி அருகே ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தியதில் ஆசிரியர்கள் பாலசந்தர், ராமகிருஷ்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து கோட்டூர் போலீசார் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ-மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இல்லை. மாவட்ட கலெக்டர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.