பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

0
84

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். மாணவியின் உடலை வாங்க மறுத்த நிலையில் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து பள்ளி மாணவி சாரளாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவி உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான தெக்களூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மாணவியின் சொந்த ஊரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.