வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா

0
78

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திரு கோவிலில் 29-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை, ஏக தின அன்னை தமிழ் லட்சாதனை, கிராம சாந்தி, பகாசூரன் வழிபாடு, கொடியேற்றம், திருக்குண்டம் திறத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 8-வது நாளான இன்று நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தாற்போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது . குண்டம் இறங்குவதற்காக கோவை, நீலகிரி, திருப்பூ, ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவை பொதுப்பணித்துறை ஸ்ரீ அம்மன் அறக்கட்டளை சார்பில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . காலையில் பூஞ்சோலையில் மலர்ந்து மணம் வீசும் கண்ணைக்கவரும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் எழுந்தருளி மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் ஆற்றில் இருந்து புறப்பட்டது.

கோவில் வளாகத்தைச் சுற்றி சுவாமி ஊர்வலமாக வந்து காலை 6 மணிக்கு பீமன்,பகாசுரன் சந்நிதி முன்பு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டு எலுமிச்சை கனியை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். அவரை தொடர்ந்து தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்கினார்கள் .