கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினர்

0
146

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். பழங்குடி இனத்தை சேர்ந்த அவர் 2-வது பெண் ஜனாதிபதி ஆவார். இந்தநிலையில் நேற்று இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதிவு ஏற்றார். மேலும் நாட்டில் பழங்குடி இனத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் திரவுபதி முர்மு பதவி ஏற்றுக்கொண்டதை கோத்தகிரி அருகே கரிக்கையூர் பகுதியில் பழங்குடியின மக்கள் கொண்டாடினர். அவர்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் இந்திய நிலக்கரி நிறுவன இயக்குனர் ராஜேஷ் சந்தர், நீலகிரி சேவா கேந்திர நிர்வாகி ஹரிசுதன் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.