பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ஜவகர்லால் நேரு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியின் போது உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த நிலையில் 1997-ம் ஆண்டு அவருடன் பணிபுரிந்த போலீஸ் நண்பர்கள் அனைவரும் காவல் காக்கும் உதவும் கரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இறந்த போலீஸ்காரர் ஜவகர்லால் நேருவின் வீட்டிற்கு நேரடியாக சென்று தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், வால்பாறை சரக தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் சகாயராஜ் ஆகியோர் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 500-க்கான காசோலையை அவரது மனைவி உஷா ராணியிடம் வழங்கினர். அப்போது இறந்த போலீஸ்காரருடன் பயிற்சி பெற்ற ஆண், பெண் தலைமை காவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.