குமரி கடலில் சூரியன் உதய காட்சியை பார்த்து வணங்கிய மத்திய மந்திரி

0
69

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத்கிஷன் ராவ் கராத் தனது மனைவியுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தார்.

மத்திய நிதித்துறை இணைமந்திரிபகவத் கிஷன்ராவ் கராத் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் குமரி மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம்ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கோவளம் கடற்கரை

பின்னர், அவர் இன்று அதிகாலையில் தனது மனைவியுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கு உள்ள ஸ்ரீகாலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தானகருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன்சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி,ஸ்ரீநாகராஜன்மற்றும் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் முக்கடல் சங்கம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை உற்சாகமாக கண்டு ரசித்தார் .பின்னர் அங்குஇருந்து கார் மூலம் கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமன பகுதி கடற்கரையினை சுற்றிப் பார்த்தார்.

அப்போது பா.ஜ.க. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், நாகர்கோவில் நகர பொறுப்பாளர் ஜெகநாதன் ,தென் தாமரைக்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் ஆகியோர் உடன்இருந்தனர்.