ஊரக உள்ளாட்சி தேர்தல் : 3-வது நாளில் 469 பேர் வேட்பு மனு தாக்கல்

0
110
கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளான நேற்று 469 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 106 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என மொத்தம் 469 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 588 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முத்து கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் கோவை மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.