தொழில் அதிபர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

0
110

கோவையை அடுத்த சூலூர்அருகேபீடம்பள்ளி ஊராட்சி ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர்முருகேசன்(வயது 57). தொழில் அதிபரான இவர் கோவையில்நோட்டு புத்தக கடைவைத்து உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன்பாண்டியனுக்கு கடந்தமாதம் சிவகாசியில் திருமணம் நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் சென்னையில் தங்கிஎன்ஜினீயராக பணியாற்றிவருகிறார். 2-வதுமகன்அருண்பாண்டியன்கோவையில் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி,முருகேசன்தனது குடும்பத்தினருடன் சிவகாசியில் நடந்த திருமணவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு, பூட்டுஉடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்வீட்டிற்குள்சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் வைத்திருந்தபொருட்கள்அனைத்தும் ஆங்காங்கேசிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும்ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
மேலும் பூஜை அறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதில் இருந்தரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிபொருட்களையும்மர்ம நபர்கள்திருடி சென்றனர். அவை அனைத்தும், அவரது மூத்த மகனின்திருமணத்துக்கு பரிசாகவந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணைசூப்பிரண்டு பாலமுருகன்,சூலூர்இன்ஸ்பெக்டர்தங்கராஜ்,சப்-இன்ஸ்பெக்டர்பாண்டியராஜ்மற்றும்போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம்குறித்துபோலீசார்கூறியதாவது:-
திருட்டு நடந்த வீட்டின் முன்புறகேட்பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்து கதவை உடைத்து நகை,பணத்தை திருடிஉள்ளனர்.
ஆனால் அங்கிருந்த மடிக்கணினியை திருடவில்லை.மடிக்கணினியை திருடிஉபயோகப்படுத்தினால் அதில் உள்ளசீரியல்எண் அல்லது சில செயலிகள் மூலம்போலீசார்கண்டுபிடித்து விடுவார்கள். எனவே மர்ம நபர்கள் மிகவும் உஷாராகமின்சாதனபொருட்களைதிருடாமல் சென்று உள்ளனர். ஆனாலும்அந்த பகுதியில்உள்ள கண்காணிப்புகேமராபதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.