சேலம் மாவட்டம்சங்ககிரி கொங்கணாபுரத்தைசேர்ந்தவர் பூபதி என்ற மகேஸ்வரன் (வயது 62), விவசாயி.இவருக்கு சாந்திஎன்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பூபதி உள்பட 12 பேர் சேர்ந்துசப்தகிரி பால்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை நடத்தினர்.இந்த கம்பெனிவளர்ச்சிக்காக பூபதிஉள்பட 12 பேரும்சொத்து பத்திரங்களைவைத்து கோவையில்உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2005-ம் ஆண்டு ரூ.9கோடி கடன்வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்இந்த கம்பெனிசரியாகஇயங்காமல்தொழிலில்நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் வாங்கிய கடனை அவர்களால்திருப்பி செலுத்தமுடியவில்லை என்று தெரிகிறது.இதன்காரணமாகவங்கி சார்பில்பல முறை நோட்டீசு அனுப்பியும் கம்பெனி நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் கடந்த 2007-ம் ஆண்டுஅந்த கம்பெனியைமூடி சீல்வைத்தனர்.இதுதொடர்பாக கம்பெனிநிர்வாகிகள் வங்கியுடன் பலமுறை பேச்சுவார்த்தைநடத்தி உள்ளனர். ஆனால் அதுதோல்வியில்முடிந்தது. நேற்று அந்த வங்கிஅதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்த பூபதி சென்றுள்ளார். அப்போது அவர் தனது பங்குக்கானதொகையை செலுத்திவிடுவதாகவும்,சொத்து பத்திரங்களைதருமாறும் கேட்டு உள்ளார். இதற்குவங்கி சார்பில்மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வங்கியில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கு பணம் செலுத்த வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் வெறைட்டிஹால் ரோடுபோலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பூபதியைமீட்டு சிகிச்சைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவரை பரிசோதித்தடாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்துபூபதியின் உடல்பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம்குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில்விவசாயி தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கியில் கடன்வாங்கியது தொடர்பாக பேச்சுவார்த்தைநடத்த பூபதி வங்கிக்கு வந்தார். பின்னர் அவர் திடீரெனமயங்கி கீழேவிழுந்தார். அவரைமீட்டு சிகிச்சைக்காகஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.