சென்னை ஐகோர்ட்டில் பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன்மித்ரு என்பவர் ஆட்கொணர்வு மனுஒன்றை தாக்கல் செய்தார். அதில் தொரட்டி என்ற படத்தில் நான் கதாநாயகனாக நடித்துள்ளேன். அந்தபடத்தி்ன் கதாநாயகியாக கோவை மாவட்டம்பொள்ளாச்சியை சேர்ந்த சந்தியா என்ற சத்திய கலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சத்தியகலா வரவில்லை. அவரை சட்டவிரோதமாக அவரது தந்தை பிடித்து அடைத்து வைத்துள்ளார். எனவே சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில்ஆஜர் படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்துசத்தியகலா தற்போது எங்கே உள்ளார் என்று வருகிற 5-ந்தேதி போலீஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டு்ம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகை சத்தியகலா கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை யாரும் கடத்தவில்லை. நான் பெற்றோரோடு சொந்த ஊரான பொள்ளாச்சியில்பத்திரமாக இருக்கிறேன்.தொரட்டி படத் தயாரிப்பாளரின் அணுகு முறையில் உடன்பாடு இல்லாததால் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருந்தேன்.
ஆனால் என் மீதுஅவதூறு பரப்பும்வகையிலும் படத்திற்கு எதிர்மறை விளம்பரம் தேடும் செயல்களிலும் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளார்.எனக்கு பேசியசம்பளத்தில் இதுவரைரூ.50 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். ஆனால் அந்தசினிமாப்படம்நல்லகதையம்சத்துடன்வெளிவர உள்ளதால் அதுபற்றி எனக்கு வருத்தம் இல்லை.நான்மாயமானதாக கூறுவது தவறு. என்னை யாரும் கடத்தவில்லை. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் அங்கு முறையிட வில்லை.படத்தயாரிப்பாளர் எனதுபெற்றோர் பற்றிஅவதூறாக பேசியதற்காகநிபந்தனையற்றமன்னிப்பு கேட்கவேண்டு்ம்.இந்த பிரச்சினையில்மூன்றாம் நபர் மூலம் சமாதானம் பேச முயன்றனர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.