தூத்துக்குடி அருகேஉள்ள குலையன்கரிசல்பகுதியை சேர்ந்தவர்கருணாகரன் (வயது 64). இவர்தி.மு.க.தலைமை செயற்குழுஉறுப்பினராக இருந்தார். இவர் கடந்த மாதம் 22-ந்தேதி தனதுதோட்டத்துக்கு செல்வதற்காக குலையன்கரிசலில் இருந்துதிரவியபுரம்செல்லும் ரோட்டில் காரில் சென்றார்.
அப்போதுமோட்டார் சைக்கிள்களில்அங்கு வந்தமர்மகும்பல்கருணாகரன் சென்ற கரை வழிமறித்தது. பின்னர்அவரை காரில்இருந்து வெளியேஇழுத்துப்போட்டுஅரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்துதப்பிச்சென்றது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முன்விரோதம்காரணமாக கருணாகரன்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார்சிலரை கைதுசெய்தனர்.
அதுபோன்று கடந்த 29-ந்தேதி சரவணன், சக்திவேல்ஆகியோர் பொள்ளாச்சி கோர்ட்டில்சரண் அடைந்தனர். இந்த நிலையில்இந்த கொலைவழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம்ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தஅன்புராஜா (24) என்பவர் நேற்றுகாலை கோவை5-வதுமாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்சரண் அடைந்தார்.
அவரை 15 நாட்கள்நீதிமன்ற காவலில்வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார்அன்புராஜாவைபலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவைமத்திய சிறையில்அடைத்தனர்.