950 கிராம் நகையுடன் பங்குதாரர் ஓட்டம்

0
25

கோவை : கோவை, வெரைட்டி ஹால் ரோடு, உப்பார வீதியை சேர்ந்தவர் சுகாந்தா ஹசாரா, 32. இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த முஷ்டாக் அலி சேக் என்பவருடன் சேர்ந்து தாமஸ் வீதியில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வந்தார்.

இருவரும் முதலீடு செய்து பணியாற்றி வந்தனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டறையில் நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு, டிச., 29ம் தேதி பட்டறையில் சுகாந்தா இல்லாத நேரம் பார்த்து, முஷ்டாக் அலி பட்டறையில் இருந்த 950 கிராம் தங்க நகைகளை எடுத்து சென்றுவிட்டார்.

சம்பவம் குறித்து சுகாந்தா வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.