கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனூர் பகுதிகளில் நூற்றுக்கணக் கான இளைஞர்கள் தனித்தனி குழுக்களாக தெருக்களில் இருப்ப தை நான் ரோந்து சென்ற போது கவனித்தேன்.
அவர்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்றாலும் சில சமயங்களில் தகராறுக்கு வழிவகுக்கம்.
எனவே சங்கனூர், ரத்தினபுரி, கண்ணப்ப நகர், எரிமேடு, அம் மன்குளம், புலியகுளம், பிள்ளையார்புரம், செல்வபுரம் உள்ளிட்ட 77 குடிசை பகுதிகள் மற்றும் 94 தொகுப்பு வீடுகள் உள்ள பகுதி யில் வீதி நூலகம் (ஸ்டீரிட் லைப்ரரி) அமைக்க உள்ளோம்.
அங்கு, அறநெறி கதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நூலகங்களை இளைஞர்கள் மாலை நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தெருநூலகம் அமைக்க தனியார் மற்றும் தொண்டு நிறுவனங் களை அணுகி உள்ளோம்.
உதவி செய்ய விரும்புவோர், என அலுவலகத்தை நேரில் அணுகலாம். புத்தகங்கள் படிப்பது இளை ஞர்கள் நல்வழியில் செல்லவும், எதிர்காலத்தை நோக்கி செல்லவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.