45வது ஸ்ரீசாரதாம்பாள் கோவில் பிரதிஷ்டா தினவிழா

0
23

கோவை: கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோவிலின், 45வது ஆண்டு பிரதிஷ்டா தினவிழா நேற்று நடந்தது.

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளால், ஸ்ரீசாரதாம்பாள் கோவில் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்று, 45 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு, ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருக்களின் அனுக்ரஹத்துடன், நேற்று காலை 6:30 மணி முதல் ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகர் மற்றும் ஆதிசங்கரர் ஆகிய தெய்வங்களுக்கு, விசேஷ அபிஷேக பூஜை நடைபெற்றது. காலை 8:45 மணி முதல், ஸ்ரீ சாரதாம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்பாளின் அனுக்ரஹத்தை பெற்றனர்.