கோவையை அடுத்த சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசுஉதவி பெறும்மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, தமிழகஅரசு சார்பில்விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சூலூர் தொகுதிஎம்.எல்.ஏ. கந்தசாமி கலந்துகொண்டு சூலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கண்ணம்பாளையம்,பீடம்பள்ளி, பள்ளபாளையம்,இருகூர், சின்னியம்பாளையம், அரசூர் வாகராயம்பாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,675 விலையில்லா மடிக்கணினிகளைவழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள்எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆகியோரை தொடர்ந்துதற்போது உள்ளஎடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅரசு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறுநலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. குறிப்பாகரூ.22 ஆயிரம்கோடி செலவிலானதிட்டங்களை கல்வித்துறைக்குவகுத்து செயல் படுத்திவருகிறது.
இதற்காக, முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமிமற்றும் அமைச்சர்கள்எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ-மாணவிகள் இந்த மடிக்கணினிகளை நல்ல முறையில் தாங்கள் பயிலும்கல்விக்கு பயன்படுத்தி, தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில்அனைத்துலகஎம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு. க.அசோகன், சூலூர்நகர செயலாளர்வக்கீல் கார்த்திகை வேலன்,கண்ணம்பாளையம்அங்கமுத்து,கூட்டுறவு சங்க தலைவர்அங்கண்ணன், லிங்கசாமி, பீடம்பள்ளி குமாரவேல், பள்ளபாளையம் சண்முகம், தண்டபாணி,இருகூர்ஆனந்தகுமார், சின்னியம்பாளையம் பெரியசாமி,அரசூர் சிவசாமி, தன்ராஜ் வாகராயம்பாளையம் தெப்பீஸ்வரன், சாமளாபுரம் பாலசுப்பிரமணி மற்றும்கழக செயலாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.