26வது உலக தாய் மொழி நாள் பேரணி

0
7

கோவை, பிப்.22: கோவை மாவட்ட தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக, 26வது உலகத்தாய்மொழிநாள் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார் துவக்கி வைத்தார். கோவை சித்தாப்புதூர் அரசு மகளிர் தொழிற்கல்லூரிக்கு முன் துவங்கிய இப்பேரணி வஉசி பூங்காவில் நிறைவுபெற்றது. இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் தாய்மொழியே பயிற்று மொழி, தாய்மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம் என முழக்கமிட்டு தாய்மொழி பற்றை வெளிப்படுத்தினர்.

இதில், பேரூராதீனம் 25ம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சி.சுப்பிரமணியம், கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகள், பேராசிரியப் பெருமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.