தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள் வதற்காக மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் அணிக்காக வீரர்கள் தேர்வு வரும் 24-ம் தேதி பெசன்ட் நகரில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி மையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்டவர்கள் (1.09.2006 அன்றும், அதன்பிறகும் பிறந்தவர்கள்), 19 வயதிற்கு உட்பட்டவர்கள் (1.09.2003 அன்றும், அதன் பிறகும் பிறந்தவர்கள்) அணிகளுக்கான தேர்வு நடக்கிறது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதார் ஜெராக்ஸ், பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு 8667643630 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.