14-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

0
79

பாம்பு கடித்து இறந்த வீரன்

கோவை அருகே மயிலேறிபாளையத்தில் அரசு பள்ளி வளாகத்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வீரன் இறந்தால் அவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நடுகல் நடுவது வழக்கம். இங்கு பாம்பு கடித்து இறந்த வீரனுக்காக 4 அடி உயர நடுகல் நடப்பட்டுள்ளது. இது 600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நடுகல் ஆகும். தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்த நடுகல் பாதுகாக்கப்படுகிறது.

உடன்கட்டை ஏறிய மனைவி

இதுகுறித்து கோவை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தமிழ்மறவன் ரமேஷ் கூறியதாவது:-

இந்த வீரன் இறந்த துக்கம் தாளாமல், அவருடைய காதல் மனைவி உடன்கட்டை ஏறி இறந்துள்ளார். எனவே அதன் அருகே சதி கல்லும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆணும், பெண்ணும் கொண்ட காதலை மையல் என்பார்கள். கணவர் இறந்த துக்கத்தில் இந்த பெண் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்ததால் மையல் ஏறிய பாளையம் என்பது மாறி மயிலேறிபாளையம் என்று உருமாறி உள்ளது. அந்த ஊருக்கான பழமையான வரலாறும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.