120 அடி ஆழ கிணற்றில் பெண் பிரேதம் தேடுதல் வேட்டை

0
12

அன்னுார்; அன்னுார் அருகே 120 அடி ஆழ கிணற்றில், தீயணைப்புத் துறையினர் பெண்ணின் பிரேதத்தை மீட்க 24 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அன்னுார் அருகே அல்லிக்காரம் பாளையத்தில், ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து வீடுகளுக்கு போர்வெல் நீர் சப்ளை செய்யப்படுகிறது. 120 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 118 அடி வரை தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கிணற்றில் யாரோ குதிப்பது போல் சத்தம் ஏற்பட்டது. அங்கு சென்று பார்த்த போது கிணற்றை ஒட்டி பெண்கள் அணியும் செருப்பு மட்டும் கிடந்தது. யாரையும் காணவில்லை.

இதையடுத்து அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. மீண்டும் நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ‘கிணற்றில் உண்மையில் யாராவது குதித்தார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை,’ என போலீசார் தெரிவித்தனர்.