12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் தொழிலாளி கைது

0
60

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் செங்கத்துறையை சேர்ந்த கூலி தொழிலாளியான அருள்குமார் (வயது 24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் செல்போனில் பேசும் போது சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட அருள்ராஜ் அங்கு சென்று உள்ளார்.

போக்சோவில் கைது

பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த சிறுமியின் விருப்பம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.