கோவை; இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து, பெயர் பட்டியலில் திருத்தம் இருந்தால், செய்து கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்க இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வரும், 14ம் தேதி பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பள்ளிகள் தங்களது ‘ஐடி’யை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர்ப்பட்டியலில், பள்ளி மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி, உரிய திருத்தங்கள் செய்து கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதல்வர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள