வேளாண் பல்கலையில் பயிற்சி : காகித பொருள் உற்பத்தித் திறன்

0
85

கோவை; கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், காகித அடிப்படையிலான பொருட்கள் உற்பத்தி சார்ந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடக்கிறது.

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உணவு பதன் செய் பொறியியல் துறை சார்பில், மாதிரி காகித ஆலை செயல்பட்டு வருகிறது. விவசாயக் கழிவுகள் மற்றும் கழிவுக் காகிதங்களைப் பயன்படுத்தி, காகித அடிப்படையிலான பொருட்களைத் தயாரிக்க இந்த ஆலை, 1976ல் நிறுவப்பட்டது.

காகிதங்களைத் துண்டாக்கும் இயந்திரம், காகிதக் கூழ், அட்டை, அட்டை நேர்த்தி, உலர்த்தி, அச்சு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான இயந்திரம் போன்றவை, கழிவுப் பொருட்களில் இருந்து காகிதம் சார் பொருட்களைத் தயாரிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளன.

இங்கு நடைபெறவுள்ள 2 நாள் பயிற்சியில், அலுவலகக் கோப்புகள், ஸ்பிரிங் கோப்புகள், நாடா கோப்புகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சிக்கட்டணமாக, ரூ. 5,000 மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 86680 41185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.