வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

0
7

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரிஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், மஞ்சள், திருநீர் என, 16 வகை வாசனை திரவியங்களால், வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.