கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் கோவை நகரில் சேரும் 1000 டன் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றுதரம்பிரிப்பதற்காகதனித்தனி மையங்கள் இருந்தாலும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை 5.20 மணியளவில் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.அந்த பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீபரவி கொழுந்துவிட்டுஎரிய தொடங்கியது.
இதுபற்றிய தகவல்அறிந்ததும் கோவைமாவட்ட தீயணைப்புஅதிகாரி பாலசுப்பிரமணி, உதவி அதிகாரிபாலகிருஷ்ணன்ஆகியோர் தலைமையில் கோவை தெற்கு மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்க பல மணிநேரம் போராடினார்கள். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இருப்பினும்தீயணைப்பு படையினர்போராடி தீயைஅணைத்து வருகிறார்கள்.
குப்பையில் தீப்பற்றியதால் புகை மூட்டம்ஏற்பட்டு சுற்றுப்புற குடியிருப்புகளுக்கு பரவியது. இதனால் சுவாச பிரச்சினைஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த குப்பைகிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. குப்பையில் மீத்தேன் சேர்ந்து தீவிபத்து ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் குப்பையில் கிடக்கும் உலோகங்களை பிரிப்பதற்காக சிலர் தீவைப்பதாகவும் அது காற்றினால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கில் தண்ணீர் தொட்டிகட்டும்பணியும் நடைபெற்றது. அந்த பணியும் முடிவடையவில்லை. இந்த குப்பைகிடங்கை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் வற்புறுத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள பசுமைதீர்ப்பாயத்திலும்வெள்ளலூர்குப்பை கிடங்கைஅகற்றக்கோரிவழக்கு விசாரணையில் உள்ளது.இந்தநிலையில்அடிக்கடி நடைபெறும் தீவிபத்து வெள்ளலூர்பகுதியை சுற்றியுள்ளபொதுமக்களுக்கு பாதிப்பைஏற்படுத்தி வருகிறது.