கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கினை அகற்றக்கோரி, த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையிலான நிர்வாகிகள், கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், ‘வெள்ளலுார் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில், மோசமான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது மாநகராட்சி குப்பை கிடங்கு.
இந்த குப்பை கிடங்கினால், மாசு ஏற்பட்டு நோய் பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.