‘வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்’

0
6

கோவை: பார்வையற்றோர் தேசிய இணையம் தமிழக மேற்கு கிளை மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் துவக்க விழா, வரதராஜபுரத்தில் உள்ள இணைய வளாகத்தில் நேற்று நடந்தது.

கோவை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி பேசுகையில், ”புலன் குறைபாடு உள்ளவர்கள், சாதாரணமாக எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. அதையும் தாண்டி நீங்கள் சாதித்திருப்பது பெரிய விஷயம். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். உங்களை நீங்கள் வடிவமைப்பது சாதனை. நமக்கு உதவி செய்வது போய், நாம் பிறருக்கு உதவி செய்கிறோம் என்பது மிகச்சிறந்த விஷயம்,” என்றார்.

பார்வையற்றோர் தேசிய இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார். தமிழக மேற்கு கிளை ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.