வீட்டினுள் புகுந்து நகை, பணம் திருட்டு

0
9

போத்தனூர்; கோவை, அரிசிபாளையத்திலுள்ள ஆப்பிள் கார்டனில் வசிப்பவர் மாரியப்பன்; வக்கீல். மனைவி சுப்புலட்சுமி கோவை வணிக வரி அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிகிறார். மாரியப்பன் அம்பாசமுத்திரத்தில் உள்ளார். கடந்த, 27ல் சுப்புலட்சுமி அம்பாசமுத்திரம் சென்றார்.

கடந்த 2ம் தேதி இரவு, இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கேட் மற்றும் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த ஒரு சவரன் தங்க மோதிரம், 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது.

மாரியப்பன் புகாரில், மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.