மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்தில் இருந்து வெளியே வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையினரை கண்டித்தும், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரியும், மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுவேதனை சந்தித்து மனு அளிக்க சென்றனர். அவர் அலுவலகத்தில் இல்லை.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தார். தாமதமாக வந்த தாசில்தாரிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்