விவசாயிகள் மகிழ்ச்சி : நேந்திரன் விலை உயர்வு

0
20

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், கரியாம்பாளையம், எல்லப்பம்பாளையம், குப்பேபாளையம், பசூர், அல்லப்பாளையம், பொங்கலுார் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நாட்டு நேந்திரன், குவின்டால் நேந்திரன் பயிரிடப்பட்டுள்ளது.

வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டங்களில் ஒரு கிலோ 50 ரூபாய் விலைக்கு நேந்திரன் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ நேந்திரன் வெறும் 15 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது சிறிது சிறிதாக விலை உயர்ந்து ஒரு கிலோ 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கதலி ரக வாழை பயிரிட்டோர் வருத்தத்தில் உள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்,’ என்றனர்.