கோவை, பிப்.21: கோவை மாவட்டத்தில் வரும் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண்மை உற்பத்தி குழு கூட்டமும், அதற்கு விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடத்தப்படும்.
இதில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு, மின் வாரியம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். விவசாயிகள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.